ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் கெஹெல்பத்தர வாக்குமூலம்!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் உள்ளஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் கெஹெல்பத்தர பத்மே, கொழும்புதுறைமுகப் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு, மேல் மாகாணவடக்கு குற்றத் தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது, கணேமுல்ல சஞ்சீவ் மற்றும் கம்பஹா பஸ் பொட்டா ஆகியோரைக்கொலை செய்ய தானே திட்டமிட்டதாக பத்மே ஒப்புக்கொண்டார்.

அத்துடன் கம்பஹா ஒஸ்மன் மீதான கொலை முயற்சியில் நேரடி தொடர்புஇல்லையெனவும், தம்மிட்ட அவிஷ்க மற்றும் கமாண்டோ சலிந்த ஆகியோரின்கோரிக்கையின் பேரில் அதற்கு ஒத்துழைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கொக்கேய்ன், ஹெரோயின், ஐஸ், குஷ் மற்றும் கேரள கஞ்சா போன்றபோதைப்பொருட்களை விற்பனை செய்து வந்ததாகவும், தமது கைபேசியில், “கொக்கேய்னை” ஐ என்ற குறியீட்டு பெயராக பயன்படுத்தியதையும், அவர்உறுதிப்படுத்தியுள்ளார்.

அத்துடன், தன்னிடம் இருந்த அனைத்து துப்பாக்கிகளையும் பொலிஸார்ஏற்கனவே மீட்டுள்ளதாகவும், தற்போது தன்னிடம் இன்னும் ஒரு துப்பாக்கிமட்டுமே மீதமுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதை ஒப்படைக்கத் தயாராகஇருப்பதாகவும், அவர் கூறியுள்ளார்.

Share this Article