எல்லைத் தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில்,
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகளில் தமிழகமீனவர்கள் மீன்துறை அலுவலக அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்குசென்றனர்.
இவர்கள் கச்சதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்தஇலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 10 பேரை கைது செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இலங்கை கடற்படையினர் தமிழகமீனவர்களை கைது செய்ததோடு, ஒரு விசைப்படகையும் கைப்பற்றி சென்றதாகதெரிவிக்கப்படுகிறது