எரிபொருள் விநியோகத்தில் அதிரடி மாற்றம் இன்று (15/03) முதல் அமுலுக்கு வருகிறது.
மத்திய கிழக்கில் நிலவும் அசாதாரண சூழ்நிலை மற்றும் உலகளாவிய எரிபொருள் இறக்குமதி சவால்களைக் கருத்திற்கொண்டு, எரிசக்தி அமைச்சு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
இன்று காலை 6:00 மணி முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் National Fuel Pass (QR) முறைமை கட்டாயமாக்கப்பட்டுள்ளது
இது தொடர்பில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விபரங்கள்.
இனி QR குறியீடு இன்றி எந்த எரிபொருள் நிலையத்திலும் எரிபொருள் வழங்கப்பட மாட்டாது.
வாராந்த ஒதுக்கீடு
மோட்டார் சைக்கிள்:- 5 லீற்றர்
முச்சக்கர வண்டி:- 15 லீற்றர்
கார்:- 15 லீற்றர்
வான்:- 40 லீற்றர்
லொறி:- 200 லீற்றர்
புதுப்பித்தல்:- ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவிலும் உங்கள் வாராந்த ஒதுக்கீடு தானாகவே புதுப்பிக்கப்படும்
சாரதிகளே உங்களிடம் ஏற்கனவே பழைய QR குறியீடு இருந்தால், அதே குறியீட்டைப் பயன்படுத்தலாம். புதிய வாகனங்களை வைத்திருப்பவர்கள் அல்லது இதுவரை பதிவு செய்யாதவர்கள் உடனே fuelpass.gov.lk இணையதளத்தில் பதிவு செய்து உங்கள் QR-ஐ தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்!
பதுக்கலைத் தவிர்க்கவும், அனைவருக்கும் சமமாக எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்யவும் எடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சிக்கு ஒத்துழைப்போம்.