எதிர்வரும் 22.11.2024 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட்டநாட்டின் பல பகுதிகளுக்கும் அவ்வப்பொழுது மழை-நாகமுத்து பிரதீபராஜா

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இலங்கைக்கு தெற்கே காற்றுச் சுழற்சி ஒன்று உள்ளது. அத்துடன் அரபிக்கடலிலும் காற்று சுழற்சி ஒன்று உள்ளது. அத்துடன் மேடன் யூலியன்அலைவின்(MJO) உள் வருகை காரணமாக இந்து சமுத்திர பிராந்தியத்தில்வடகீழ் பருவமழையும்  தீவிரமடைந்துள்ளது.  இவற்றின்  காரணமாக அடுத்த சிலநாட்களுக்கு குறிப்பாக எதிர்வரும் 22 வரை வடக்கு , கிழக்கு மாகாணம் உட்பட்டபல பகுதிகளுக்கும் மழை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் நிலம் நிரம்புநிலையை எட்டியுள்ளது. அத்துடன் தொடர்ச்சியாக மழையும் கிடைத்துவருகின்றது.குறிப்பாக 19.11.2024 வரை வடக்கு மற்றும் கிழக்குமாகாணங்களின் பல பகுதிகளுக்கும் அவ்வப்போது கனமழை கிடைக்கும்வாய்ப்புள்ளது என புவியியற்துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா இன்று (நவம்பர் 16) சனிக்கிழமை மதியம் 12.30 மணி வானிலை தகவலில் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் தாழ்நிலப் பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கும் வாய்ப்புள்ளது. எனவேதாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ள அனர்த்தம் தொடர்பில்அவதானமாக இருப்பது அவசியம்.

வடகீழ் பருவமழையின் தீவிரத் தன்மையினை இனிவரும் வாரங்களில்அனுபவிக்க முடியும்.  நான் முன்னரே குறிப்பிட்டது போன்று நவம்பர் மாதத்தின்18 நாட்கள் மழை நாட்களாக இருக்கும் என்பது மீளவும் குறிப்பிடக் கூடியது.

தொடர்ச்சியாக எதிர்வரும் 23.11.2024 ஆம் தேதி அளவில் வங்காளவிரிகுடாவில் தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது.  அது எதிர்வரும் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அண்மித்தபகுதிகளுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத் தாழமுக்கம் தொடர்பானமேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

Share this Article