10.03.2025 திங்கட் கிழமை இரவு 11.00 மணி வானிலை அறிக்கை.
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தெற்கு தென்கிழக்கு பகுதியில்உருவாகியுள்ள காற்றுச் சுழற்சி காரணமாக தற்போது வடக்கு மற்றும் கிழக்குமாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் மழை எதிர்வரும் 18.03.2025 வரை தொடரும் வாய்ப்புள்ளது( சில வேளைகளில் இதற்கு பின்னரும் மழைதொடரக்கூடும்).
தற்போதைய நிலையின்படி இந்த காற்று சுழற்சி தாழமுக்கமாக மாற்றம் பெற்றுமட்டக்களப்பு மாவட்டத்தின் ஊடாக இலங்கையின் நிலப்பகுதிக்குள் நுழைந்துநாட்டின் நடுப்பகுதியினூடாக அரபிக் கடலை நோக்கி நகரும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் 18ம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு பரவலாகஅவ்வப்போது மழை கிடைக்கும் வாய்ப்பிருந்தாலும் 11.03.2025 அடுத்த மூன்றுநாட்களுக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும்கனமானது முதல் மிகக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பெரிய மற்றும் நடுத்தரகுளங்கள் வான் பாய்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
கனமழை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தாழ்நிலப்பகுதிகளில் எதிர்வரும் 12.03.2025 இற்கு பின்னர் மிதமான வெள்ளஅனர்த்தத்துக்கு வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் உள்நிலப்பகுதிகளில்காற்றின் வேகம் மணிக்கு 40 கி.மீ. என்ற அளவில் காணப்படுகிறது. கரையோரப்பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் வீசுகின்றது. நாளை முதல் காற்றின்வேகம் அதிகரிக்க கூடும். குறிப்பாக மழை பொழியும் போதும் அதற்கு பின்னரும்காற்றின் வேகம் அதிகரிக்க கூடும்.
11.03.2025 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள்கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் நாளை முதல் மறுஅறிவித்தல் வரை மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது.
கடந்த பெப்ரவரி மாதம் 21ம் திகதி குறிப்பிட்டது போல் இந்த மார்ச் மாதத்தின்கணிசமான நாட்கள் மழையுடன் கூடிய வானிலை நிலவும் என்பது மீளவும்குறிப்பிடத்தக்கது.