உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்று (பெப்ரவரி 24) இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
இந்த விடயம் தொடர்பாகத் தீர்மானம் எடுப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இடையே இன்று முக்கியமான சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது.
தேர்தலை நடத்துவதற்கு உகந்த சூழல் இல்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உயர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.
அதேவேளை, உள்ளூராட்சித் தேர்தல் சட்ட ரீதியாக அறிவிக்கப்படவில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
நாட்டன் நிதி நிலைமை மற்றும் ஏனைய விடயங்களை ஆராய்ந்து தேர்தலை நடத்துவதா இல்லையா என்பது தொடர்பில் இன்று தேர்தல்கள் ஆணைக்குழு முடிவெடுக்கவுள்ளது.