நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்று (ஒக். 03) மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று உலக மதுவிலக்கு தினம் என்பதனால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனுடன், சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கலால் திணைக்களம் எச்சரித்துள்ளது. மேலும், இவ்வகை சட்டவிரோத விற்பனையாளர்களை கைது செய்வதற்காக விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.