உடுத்துறை ஆழிப்பேரலை நினைவேந்தல்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

ஆழிப் போரலையில் உயிரிழந்தவர்களின் 21 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் அமைந்துள்ள நினைவு தூபி வளாகத்தில் நேற்று (26/12) காலை இடம்பெற்றது.

முதலில், நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.மலர் மாலையை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக தலைமை கிராம அலுவலர் செபமாலை தோமஸ் யூட் அணிவித்தார். அதனைத்தொடர்ந்து சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில்,மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர், வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினர், பொது அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Share this Article
Leave a comment