ஈஸி கேஷ் முறையில் போதைப்பொருள் விற்பனை !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மகப்பேறு கிளினிக்கிற்குச் செல்வதாகக் கூறி ஐஸ் போதைப்பொருளைவிற்பனை செய்து வந்த தம்பதியினர் நேற்று (செப்.26) நாவலப்பிட்டிபொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

ஈஸி கேஷ் முறை மூலம் பணம் பெற்று, கம்பளை மற்றும் நாவலப்பிட்டிபகுதிகளில் மோட்டார் சைக்கிளில் ஐஸ் போதைப்பொருளை விநியோகித்தபோதுஇத்தம்பதியினர் கைது செய்யப்பட்டனர்.

நாவலப்பிட்டியில் உள்ள தொலஸ்பாகை வீதியில் அமைந்துள்ள பழையரயில்வே உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகில் பொட்டலமிடப்பட்ட ஐஸ்பெக்கெட்டுகளை இவர்கள் மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

சந்தேக நபர்களைச் சோதனை செய்தபோது, 52 பொட்டலமிடப்பட்ட ஐஸ்பெக்கெட்டுகள் (35 கிராம்) கண்டுபிடிக்கப்பட்டன.

மேலும், பல பொட்டலங்கள் சந்தேக நபரான பெண்ணின் உள்ளாடையில்மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

23 மற்றும் 27 வயதுடைய சந்தேக நபர்கள், கம்பளை. கிரபன பகுதியைச்சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

‘டுபாய் தாரு’ என்ற போதைப்பொருள் கடத்தல்காரரிடமிருந்துபோதைப்பொருட்களை வாங்கி, ஈஸி கேஷ் முறையைப் பயன்படுத்திவிநியோகித்ததாகக் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட தம்பதியினர் நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Share this Article