இஸ்ரேலில் புதுப்பித்தல் துறைக்கான தொழிலாளர் பதிவு காலம் நீட்டிப்பு – SLBFE அறிவிப்பு

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இஸ்ரேலில் கட்டுமானத் துறையின் புதுப்பித்தல் துணைத் துறையில் வேலை செய்ய தகுதியான தொழிலாளர்களை பதிவு செய்வதற்கான காலத்தை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் இரண்டு நாட்களால் நீட்டித்துள்ளது.

பொது புதுப்பித்தல் (General Renovation), பீங்கான் டைலிங் (Ceramic Tiling) மற்றும் பிளாஸ்டரிங் (Plastering)போன்ற பணிகளுக்கான ஆன்லைன் பதிவு இன்று (அக். 03) தொடங்கி வரும் அக். 07ஆம் திகதி காலை 9.00 மணி வரை பணியகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.slbfe.lk மூலமாக மேற்கொள்ளலாம்.

தகுதிகள்:

  • வயது 25 முதல் 45 வரை உள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.

  • தொடர்புடைய துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

  • முன்பு இஸ்ரேலில் வேலை செய்தவராக இருக்கக் கூடாது; அங்கு பணிபுரியும் அல்லது வசிக்கும் உறவினர்கள் இல்லாமையும் அவசியம்.

  • குறைந்தது 3 ஆண்டுகள் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு வைத்திருக்க வேண்டும்.

  • இஸ்ரேலின் காலநிலை மற்றும் வேலை சூழலுக்கு உடல், மன ரீதியாகத் தகுதியானவராகவும், நாள்பட்ட/தொற்று நோய்கள் மற்றும் குற்றப் பின்னணி இல்லாதவராகவும் இருக்க வேண்டும் (சுத்தமான பொலிஸ் அறிக்கை அவசியம்).

  • குறைந்தது 10 ஆண்டு பாடசாலைக் கல்வி முடித்திருக்க வேண்டும்.

  • அடிப்படை ஆங்கில அறிவு பெற்றிருக்க வேண்டும்.

  • முன்னர் திறன் பரீட்சையில் தோல்வியடைந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது.

சம்பளம் மற்றும் நிபந்தனைகள்:
தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு 63 மாத ஒப்பந்த காலத்திற்கு, மேலதிக நேரக் கொடுப்பனவுடன் மாதம் 1,520 அமெரிக்க டொலர் சம்பளம் வழங்கப்படும்.

மேலும், இந்த வேலைகளுக்கான பதிவு, நேர்முகத் தேர்வு, திறன் பரீட்சை மற்றும் லொத்தர் முறையிலான தேர்வுஆகியவற்றில் பங்கேற்க எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது என்று பணியகம் அறிவித்துள்ளது.

👉 இதற்காக சிறப்பு வலைப்போர்ட்டலும் www.slbfe.lk இணையதளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Share this Article