இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பற்றிமா தேவாலயத்திற்குஅருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (டிசம்பர்15) இரவு வீதியோரத்தில் இருந்த இருவர் மீது தனியார் பேருந்துமோதி விபத்து ஏற்பட்டதில் அப்பகுதியைச் சேர்ந்த 76 வயதான நபரும் அவரதுமகனும் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்களை தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததுடன் மகன் சிகிச்சைப்பெற்று வருகிறார்.
விபத்தினை பேருந்தின் சாரதி தப்பியோடியுள்ள நிலையில், இளவாலைபொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.