இலங்கை விமானப்படை உலங்கு வானூர்தி நிவாரணப் பணியின்போது விபத்து!!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

லுனுவில மற்றும் வென்னப்புவ இடையிலான பகுதியில் இலங்கை விமானப்படையைச் சேர்ந்த Bell-212 ரக உலங்கு வானூர்தி ஒன்று அவசர தரையிறக்கம் செய்ய முற்பட்ட போது இன்று மாலை (30/11 ) விபத்துக்குள்ளாகியது

விமானத்தில் பயணித்த ஐந்து விமானப்படை உத்தியோகத்தர்களும் உயிருடன் மீட்கப்பட்டு, உடனடியாக மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்

வெள்ள அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதுடன், யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Share this Article