இலங்கை முகாமையாளரை தாக்கிய முக்கிய சந்தேக நபர் கைது.
பாகிஸ்தானில் தொழிற்சாலையில் இலங்கை முகாமையாளர் பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய’ சந்தேக நபரான இம்தியாஸ் அலியா பில்லி என்பவர் ராவல்பிண்டி செல்லும் பேருந்தில் வைத்து பாகிஸ்தான் பஞ்சாப் பொலிஸார் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர். இதனை பஞ்சாப் பொலிஸார் தமது அதிகாரப்பூர்வ ருவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டதன் மூலம் இலங்கை முகாமையாளரை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியவர் உட்பட வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
பஞ்சாப் முதல்வர் உஸ்மான் பஸ்தார் மற்றும் பஞ்சாப் ஐஜி ஆகியோர் வழக்கு விசாரணையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த வழக்கை விசாரிக்கும் பணியை, அரசுத் தரப்பு செயலரிடம் முதல்வர் ஒப்படைத்துள்ளார் என்று பொலிஸ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தத் தாக்குதலைத் தூண்டியவர்களில் ஒருவரான அத்னான் இப்திகாரையும் பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.