இலங்கை தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்தது!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

திர்வரும் ஜனாதிபதி தேர்தலில், இலங்கை தமிழரசு கட்சி, எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளது.

இன்று வவுனியாவில் நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

மேலும், தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு ஆதரவு வழங்காது, அவரை போட்டியிலிருந்து விலகுமாறு கேட்டுக்கொள்வதற்கும் இதே கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டதாக எம்.ஏ. சுமந்திரன் கூறினார்.

Share this Article