’இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் நிதி’க்கு இதுவரை 697 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நன்கொடைகள் கிடைத்துள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும இன்று தெரிவித்தார்.
இதில் 635 மில்லியன் ரூபாய் இலங்கை வங்கி கணக்கின் மூலமாகவும், மேலும் 61 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகை மத்திய வங்கி கணக்குகள் மூலமாகவும் பெறப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
33 இற்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்தும், வெவ்வேறு வைப்புத் தொகைகளில் இருந்து 30,470 பங்களிப்புகளாக இந்தத் தொகை பெறப்பட்டுள்ளது என்று சூரியப்பெரும மேலும் தெரிவித்தார்.