இலங்கையின் கடன் திட்டம் குறித்து IMF இனது தெளிவுபடுத்தல்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இலங்கையின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் மூன்றாவது மீளாய்வைப்பற்றி கலந்துரையாட சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று விரைவில்இலங்கைக்கு விஜயம் செய்யும் என சர்வதேச நாணய நிதியத்தின்  ஆசிய பசுபிக்பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் இன்று (நவம்பர் 01) நடத்திய விசேட செய்தியாளர்மாநாட்டில் அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய அரசாங்கம் பதவிப் பிரமாணம்செய்து கொண்டதன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள்இலங்கைக்கு வந்து ஜனாதிபதி மற்றும் குழுவினருடன் ஆக்கபூர்வமானகலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.

இது தொடர்பான கலந்துரையாடல்களுக்காக இலங்கைக் குழுவொன்றுவாஷிங்டனுக்கு வந்துள்ளதாகவும், இலங்கையின் புதிய அரசாங்கம் சர்வதேசநாணய நிதியத்தின் திட்டத்திற்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும்உறுதிப்படுத்தியுள்ளதாகவும் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டார்.

Share this Article