இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 32 இந்திய மீனவர்களைகைது செய்துள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்திய எல்லையை மீறி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை இந்த கைதுநடவடிக்கையை எடுத்துள்ளது. இச்சம்பவத்தில் 18 மீனவர்களை கைது செய்ததுடன் அவர்களது 3 மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது.
மேலும், மற்றொரு சம்பவத்தில் 14 மீனவர்களை இரு படகுகளுடன் சிறைபிடித்துதலைமன்னார் கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படை அழைத்துசென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று ஒரே நாளில் மொத்தம் 32 மீனவர்களும், 5 படகுகளும் இலங்கைகடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சம்பவம், இராமேஸ்வரம் மீனவர்கள்மற்றும் குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதுடன்,
கைதான மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என தமிழக மீனவர்கள்மற்றும் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.