இரண்டாம் கட்ட விருப்பு வாக்கு எண்ணிக்கை ஆரம்பம்!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

2024 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு அமைய எந்த ஒரு வேட்பாளரும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்கினை பெறவில்லை என தேர்தல் ஆணைக்குழுஉத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்கமைய,  இரண்டாம் கட்ட விருப்பு வாக்கு எண்ணிக்கையின் ஊடாக புதியஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகதேர்தல் ஆணைக்குழுத் தலைவர் ஆர். எம். ஏ. எல் ரத்நாயக்க தெரிவித்தார்.

அதன்படி,  பிரதான இரண்டு வேட்பாளர்களை தவிர ஏனைய அனைத்துவேட்பாளர்களும் போட்டியில் இருந்து நீக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

எனவேஇ போட்டியில் இருந்து நீக்கப்படும் வேட்பாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள
விருப்பு வாக்குகளுக்கு அமைய புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படவுள்ளதாக
தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் ஆர். எம். ஏ. எல் ரத்நாயக்க மேலும்தெரிவித்தார்.

இதற்கமைய,  வரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதி தேர்தல் ஒன்றில்
இரண்டாம் கட்ட விருப்பு எண்ணிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது

Share this Article