இன்று(டிசம்பர் 14) மாலை 6.00 மணி முதல் இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் 31′ 3” ஆக காணப்படுவதனால் இன்று பின்னிரவில் வான்கதவுகள் திறக்கப்படலாம் என நீர்ப்பாசனத்திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளதாக இரணைமடுக்குள கமக்காரர் அமைப்புகளின் சம்மேளனம் அறிவித்துள்ளது.
அச் செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
காலநிலை அவதான நிலையத்தின் எதிர்வு கூறலுக்கு அமைவாகவும் தற்போது தொடரும் மழை நாளையும் தொடரும் என எதிர்பார்ப்பதாலும் குளத்தின் நீர்மட்டமும் உயர்வடைந்து வருவதால் இன்று பின்னிரவில் வான்கதவுகள் திறக்கப்படலாம் என நீர்ப்பாசனத்திணைக்களம் தகவல் தந்துள்ளனர்.
குளத்தின் கீழான வான்பாயும் பகுதிகளான பன்னங்கண்டி, முரசுமோட்டை, ஐயங்கோவிலடி, பெரியகுளம், வெலிக்கண்டல் கண்டாவளைப் பகுதி விவசாயிகள், குடியிருப்பாளர்கள், கால்நடை வளர்ப்போர் மிக அவதானமாக இருக்குமாறு வேண்டப்படுகிறார்கள்.
அப்பகுதி கமக்காரர் அமைப்பினர் மக்களிற்கு உரிய தகவல் கிடைக்க ஆவன செய்ய வேண்டுவதோடு நீர்செல்லும் வழிகளில் தடைகள் இருப்பின் அவற்றை அகற்ற விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம்.