இடம்பெயர்ந்த மக்களின் வலி – வேதனை எனக்குத் தெரியும். அதனால், மீள்குடியமர்வுக்கான நடவடிக்கைகள் தொடர்பில் தொடர்ந்து பேச்சுக்களைநடத்தி வருகின்றேன். படிப்படியாக காணிகளை விடுவிக்க என்னாலானஅனைத்து முயற்சிகளையும் எடுப்பேன் என வடக்கு மாகாண ஆளுநர்நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநருக்கும் காணி உரிமைக்கான மக்கள்கூட்டமைப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில்நேற்றைய தினம் (பெப். 05) இடம்பெற்றது. அதன் போதே ஆளுநர்அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
காணி உரிமையாளர்களின் கோரிக்கைக்கு மாறாக நான் நடந்துகொள்ளமாட்டேன். காணி உரிமையாளர்கள் விரும்பாத எந்தவொரு தீர்வையும்திணிப்பதற்கும் நான் தயாரில்லை. காணிகள் தொடர்பில் அதிகாரிகளும் சிலஇடங்களில் தவறிழைத்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் விரைவில் நடமாடும் சேவை நடத்தி தீர்க்கக் கூடியகாணிப் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்களின் காணிகள் மக்களுக்கே வழங்கப்பட வேண்டும்என்பது ஜனாதிபதியினது நிலைப்பாடு. அந்த நிலைப்பாட்டையே நானும்வலியுறுத்துகின்றேன்
மாவட்டச் செயலர்களாக 4 மாவட்டங்களில் பதவி வகித்தவன் என்றஅடிப்படையில் பாதுகாப்புத் தரப்பினர் வசம் உள்ள காணிகள் தொடர்பானவிவரங்கள் தெரியும்.
அதனடிப்படையில் இது தொடர்பில் ஏற்கனவே பாதுகாப்புத் தரப்பினருடன்பேச்சு நடத்தி வருவதாகவும் மேலும் தெரிவித்தார்.