இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம் “சிஎன்என் டிராவலின்” பரிந்துரைப்படி, ஆசியாவிலேயே மிகவும் தரப்படுத்தப்படாத 18 இடங்களில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் தொடர்பாக விபரிக்கும் சிஎன்என் டிராவல் வழிகாட்டித்தளம், பெரும்பாலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கையின் அழகிய தென் கடற்கரை அல்லது மத்திய மலைநாட்டுக்குச் செல்கிறார்கள். இந்த இரண்டு பிரதேசங்களுக்கும், கொழும்பு நகரத்திலிருந்து செல்வது மிகவும் எளிதானது.
இலங்கையின் வடக்குப் பகுதிக்கு சில சமயங்களில் சவாலான கார் அல்லது பஸ் பயணங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. யாழ்ப்பாணம், நாட்டின் தமிழ் பேசும் மக்களின் முதன்மையான தாயகமாகும்.
யாழ்ப்பாணத்துக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளை கட்டடக் கலையுடன் தமது பயணத்தை ஆரம்பிக்க முடியும் என்று சிஎன்என் டிராவல் வழிகாட்டித்தளம் கூறுகிறது.
அலங்கரிக்கப்பட்ட, பிரகாசமான தங்க நல்லூர் கந்தசுவாமி கோவில் மற்றும் யாழ்ப்பாண நூலகம் இரண்டும் முக்கியமானவையாகும்.
யாழ்ப்பாண உணவுகள் தொடர்பாகக் குறிப்பிடும் சிஎன்என் சுற்றுலா வழிகாட்டித்தளம், வாழைப்பழங்கள், மாம்பழங்கள், கறிகள், ஊறுகாய்கள் மற்றும் அரிசி உணவுகளுடன் சேர்த்து, மலிவு உணவுகள் அங்கு கிடைக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளது.