ஆசியாவில் ஏற்பட்ட அனர்த்தங்களுக்கு உதவ முன்வந்த ஆப்பிள் நிறுவனம்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வெள்ளம், மண்சரிவு மற்றும் பலத்த காற்றால் உருவான அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளுக்கான நிவாரணம் மற்றும் மீள்கட்டுமான நடவடிக்கைகளுக்கு உதவ முன்வந்துள்ளது ஆப்பிள் (Apple) நிறுவனம்.

தமது ‘X’ சமூக வலைதள கணக்கில் பதிவிட்டுத் இதை உறுதிப்படுத்தியுள்ளார் அந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிம் குக்.

தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் உருவான கடும் அனர்த்த சூழ்நிலை காரணமாக அங்குள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாடுகளில் ஏற்பட்ட இயற்கை பேரழிவால் 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததோடு, மில்லியன் கணக்கானோர் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நிவாரணப்பணிகள் மற்றும் மீள்கட்டுமான முயற்சிகளில் தேவையான ஆதரவை வழங்க ஆப்பிள் நிறுவனம் முன்வந்துள்ளது.

Share this Article