அவசியமான மருந்துகளுக்கு பெரும் தட்டுப்பாடு!!!

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

மத்திய மருந்து சேமிப்பு கட்டமைப்பில் சுமார் 180 அத்தியாவசிய மருந்துகளுக்குதட்டுப்பாடு நிலவுகிறது. அத்தோடு மருத்துவமனைக் கட்டமைப்பிற்குள்ளும் சுமார்50 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் சமில் விஜேசிங்கதெரிவித்துள்ளார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) இடம்பெற்ற ஊடகவியலாளர்மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மத்திய மருந்து சேமிப்பு கட்டமைப்பில் சுமார் 180 அத்தியாவசிய மருந்துகள்பற்றாக்குறையாகவுள்ளது.

மருத்துவமனை கட்டமைப்பிற்குள்ளும் சுமார் 50 வகையான அத்தியாவசியமருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

குறிப்பாக வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், இரத்த அழுத்தம், நீரிழிவுமற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய் நிலைமைகளுக்கான மருந்துகள் இந்தபற்றாக்குறை பட்டியலில் உள்ளடங்குகிறது.

புற்றுநோய் சிகிச்சை மருந்துகளின் பற்றாக்குறை அதிகரித்து வருவதையும்அவதானிக்க முடிகிறது. இது பல நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கானஅணுகலையும் கட்டுப்படுத்தியுள்ளது.

அத்தகைய மருந்துகளை தனிப்பட்ட முறையில் வாங்குவது பெரும்பாலும்கட்டுப்படியாகாது. இந்த நெருக்கடி பாதிக்கப்பட்டவர்களின் சுமையை மேலும்அதிகரிக்கிறது.

கடந்த காலங்களில் ஏற்பட்ட மருந்து பற்றாக்குறையிலிருந்து பாடம்கற்றுக்கொள்ளத் தவறியமையினாலேயே இந்த பிரச்சினை தொடர்ந்தும்தீர்க்கப்படாமலுள்ளது.

2024ஆம் ஆண்டு கொள்முதல் தாமதங்கள்தான் இதற்குக் காரணம் என்றுசுகாதார அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார்.

எனவே இந்த பிரச்சினை தொடர்பில் சுகாதார அமைச்சரும் ஜனாதிபதியும்பொறுப்பை ஏற்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம். இந்தப் பிரச்சினை ஏன்முன்னரே கண்டறியப்படவில்லை?

தற்போதைய மருந்து பற்றாக்குறைகள் அவசரகால கொள்முதல்நடைமுறைகளை நம்பியிருப்பதற்கு வழிவகுக்கும். இது பொது நிதியை தவறாகப்பயன்படுத்துவது குறித்த கவலைகளை எழுப்புகிறது.

அந்த வகையில் இது அவசரகால கொள்முதல் நாடகத்திற்கு தெளிவாகவழிவகுக்கிறது. மருந்துகள் கிடைக்கவில்லை மற்றும் முற்பதிவுகள்தாமதமானால், விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சுகாதார அமைச்சிற்குஅவசரகால கொள்முதல்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்றார்.

Share this Article