அரச பொது போக்குவரத்து சேவைக்காக குளிரூட்டப்பட்ட சொகுசு பேரூந்துகள்கையளிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாணம் –  கொழும்பு பொது போக்குவரத்து சேவைக்காக குளிரூட்டப்பட்டஇரு சொகுசு பேரூந்துகள் யாழ்.டிப்போவிடம் நேற்று (ஓகஸ்ட்27) கையளிக்கப்பட்டன.

யாழ், கொழும்பு போக்குவரத்தில் இதுவரைகாலமும் தனியார் தரப்பினரேஇவ்வாறான பஸ் சேவையை வழங்கி வந்த நிலையில், இனி அரச தரப்பாலும்சிறப்பு சேவையை வழங்கக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக கையளிப்பு நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்..

இலங்கையில் நடந்த பொதுநலவாய மாநாட்டுக்காக கொண்டுவரப்பட்ட சொகுசுபஸ்கள், சில நாட்கள் பாவனையின் பின்னர் அப்படியே கைவிடப்பட்டன குறித்தபஸ்கள் திருத்தப்பட்டு – நவீனமயப்படுத்தப்பட்டு எமது ஆட்சியில் மக்கள்மயப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்ஓர் அங்கமாகவே இரு பஸ்கள் யாழ். டிப்போவுக்குவழங்கப்பட்டுள்ளது.எதிர்காலத்தில் மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சிக்கும்பஸ்களை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பில்போக்குவரத்து அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article