அரசியல் கட்சிகள், தமது தேர்தல் பேரணிகளில் கலந்துகொள்ளும் வகையில்மக்களை அழைப்பதற்காக, மனிதவள நிறுவனங்களின் சேவையை பெற்றுவருவதாக ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
விஜயதாச ராஜபக்சவின் கூற்றுப்படி, இந்த நிறுவனங்கள் சுமார் முழு நாள்நிகழ்வுக்காக ஒரு நபருக்கு 3,000 ரூபாயையும், குறுகிய காலத்துக்கு 1,500 ரூபாயையும் அறிவிடுகின்றன.
இந்த அடிப்படையிலேயே அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்குமக்கள் கூட்டத்தை கூட்டிச் செல்வதாக விஜயதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதேவேளை, நாட்டிலுள்ள 5 மில்லியன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிவாக்காளர்களின் ஆதரவுடன் தாம் தேர்தலில் வெற்றி பெறமுடியும் என்று அவர்நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.