அமெரிக்கா முழுவதும் விமானங்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளன!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

அமெரிக்காவில் நேற்று (13/11)  பிற்பகல் முதல் அமெரிக்காவின் அனைத்து விமான நிலையங்களிலிருந்தும் புறப்படும் விமானங்களுக்கு ஃபெடரல் விமான நிர்வாகம் நாடு தழுவிய தரையிறக்கத் தடையை விதித்துள்ளது. தொலைத்தொடர்பு அமைப்பில் ஏற்பட்ட தற்காலிகத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் பாதுகாப்பு நலன் கருதி இந்த அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

வெள்ளிக்கிழமை மாலை 3:54 மணி முதல் அமெரிக்க விமான நிலையங்களிலிருந்து புறப்படும் அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன

ஏற்கனவே வானில் பறந்து கொண்டிருக்கும் விமானங்கள் பாதுகாப்பாகத் தங்கள் இலக்கை நோக்கிச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளிலிருந்து அமெரிக்கா வரும் சர்வதேச விமானங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாகக் கையாளப்படுகின்றன.

இந்தத் தொழில்நுட்பக் கோளாறின் பின்னணியில் எந்தவொரு சைபர் தாக்குதலோ அல்லது பாதுகாப்பு அச்சுறுத்தலோ இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை என்று அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் மார்க்வேன் முல்லின் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த அதிரடி உத்தரவால் அமெரிக்கா முழுவதும் சுமார் 9,000 இற்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியுள்ளதோடு நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Share this Article
Leave a comment