அதிக அரச விடுமுறை வழங்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 4ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.
190 நாடுகளை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இலங்கை 4ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் மியன்மார் உள்ளது. மியான்மாரில் நடப்பாண்டில் மட்டும் 32 அரச விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
5 முதல் 8 நாள்கள் தொடர்ச்சியாகவும் அங்கு விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. 30 அரச விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ள நேபாளம் இரண்டாம் இடத்திலும், 26 அரச விடுமுறைகள் வழங்கப்பட்ட ஈரான் 3 ஆம் இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கை இந்த பட்டியலில் 4 ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த வருடத்தில் இதுவரை 25 அரச விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. மலேசியா, பங்களாதேஸ், எகிப்து, கம்போடியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் தரப்படுத்தப்பட்டுள்ளன.