அச்சுவேலி பொலிஸாரால் 250 லிட்டர் கோடா மற்றும் 15 லிட்டர் கசிப்பு என்பனகைப்பற்றப்பட்டுள்ளன.
அச்சுவேலி வாகையடி பகுதியிலுள்ள வீடொன்றினுள் நேற்று(மே29) மாலைகசிப்பு உற்பத்தி இடம் பெறுவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல்கிடைத்துள்ளது.
இதனையடுத்து அச்சுவேலி உதவி பொலிஸ் பொறுப்பதிகாரியும் குற்றத்தடுப்புபிரிவின் பொறுப்பதிகாரியுமான பொலிஸ் பரிசோதகர் பால சூரியதலைமையிலான பொலிஸ் கொஸ்தாபிள்களான ஆனந்தராஜ், இந்திக்க, விதுஷன், சமக்தா ஆகியோரின் சுற்றி வளைப்பில் குறித்த கசிப்பு உற்பத்திநிலையம் முற்றுகையிடப்பட்டது.
இதன்போது கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய அடுப்பு, கொள்கலன்கள்உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டதோடு, கசிப்பு உற்பத்தியில்ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் வாகையடி பகுதியை சேர்ந்த 25 வயதுடையஇளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார்நடவடிக்கை எடுத்துள்ளனர்.