மேனாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்கம்!!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

முன்னாள் ஜனாதிபதிகள் உரித்துரிமைகள் சட்டத்தை ரத்து செய்வதற்கானசட்டமூல வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட நாளில் இருந்து பின்வரும்உரித்துரிமைகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டவிசேட சலுகைகளை ரத்து செய்யும் வகையில், ஜனாதிபதியின் உரித்துரிமைகள்சட்டத்தை ரத்து செய்வதற்கான சட்டமூலத்திற்கு அமைச்சரவை அண்மையில்அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1986 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க சனாதிபதிகளின் உரிமைகள்(இல்லாதொழித்தல்) சட்டமூலத்தை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காகசமர்ப்பித்தல்

வளமான நாடுஅழகான வாழ்க்கைஎன்னும் அரசாங்கத்தின் கொள்கைபிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு முன்னாள் சனாதிபதிகளுக்கும்அவர்களுடைய குடும்பங்களுக்கும் வழங்கப்படும் விசேட சிறப்புரிமைகளைஇல்லாதொழிப்பதற்கு இயலுமாகும் வகையில் 1986 ஆம் ஆண்டின் 4 ஆம்இலக்க சனாதிபதிகளின் உரிமைகள் சட்டத்தை நீக்குவதற்கு சட்டமூலமொன்றைதயாரிக்கும் பொருட்டு 2025‑06‑16 ஆம் திகதியன்று நடாத்தப்பட்டஅமைச்சரவைக் கூட்டங்களில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்கஇந்த நோக்கம் கருதி சட்டவரைநரினால் சனாதிபதிகளின் உரிமைகள்(இல்லாதொழித்தல்) சட்டமூலமானது தயாரிக்கப்பட்டுள்ளதோடு, அதன் பொருட்டுசட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த சட்டமூலத்தைஅரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின்பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நீதி மற்றும் தேசியஒருமைப்பாட்டு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்குஅமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

Share this Article