மரண அறிவித்தல் – தர்மலிங்கம் சுந்தரலிங்கம்

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

                     மரண அறிவித்தல்

             தர்மலிங்கம் சுந்தரலிங்கம்

(முன்னாள் ஆசிரியர் – கிளி/வட்டக்கச்சி ம. வி, கிளி/வன்னேரிக்குளம் ம. வி, உரிமையாளர்- ஶ்ரீ லிங்கா பொத்தகசாலை( கிளிநொச்சி, விசுவமடு, மாங்குளம், மல்லாவி) ஶ்ரீ லிங்கா அரிசி ஆலை – திருவையாறு)

நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா திருநாவற்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும், கிளிநொச்சி 86/3 திருவையாறை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் சுந்தரலிங்கம் அவர்கள் திங்கட்கிழமை (27.01.2025) இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான  தர்மலிங்கம் ( முன்னாள் கிராம சபை உறுப்பினர் , நெடுந்தீவு) சொர்ணம் தம்பதிகளின் பாசமிகு மகனும்,  காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் வேலாசிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும் கமலம்மா( ஓய்வுநிலை பிரதம எழுதுநர், கிளிநொச்சி மாவட்ட செயலகம்) அவர்களின் பாசமிகு கணவரும் ஆவார்.

இந்திரலோஜினி, நிசாமினி,துஷாலினி(ஆசிரியை,மு/சுதந்திரபுரம் தமிழ் ம. வி) சியாமா, மோகனவேணி, காண்டீபன்( ஆசிரியர், வ/ஶ்ரீ நாகராஜா வித்தியாலயம்- சிதம்பரபுரம், முன்னாள் உறுப்பினர்- வவுனியா நகரசபை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்

கிரிதரன் , ஞானதேசிகன் , தஜிபரன்(அபிவிருத்தி உத்தியோகத்தர்-கரைத்துரைப்பற்று), தனராஜி, பத்மகௌரி (ஆசிரியை- வ/சைவப்பிரகாச மகளிர் கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற காசிநாதன் மன்றும் தங்கலட்சுமி, சொர்ணலட்சுமி, லிங்கநாதன், யோகநாதன், காலஞ்சென்ற யோகலட்சுமி ஆகியோரின் சகோதரனும்,

சிவபாக்கியம் காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை மற்றும் பரமேஸ்வரநாதன், ரதிதேவி, கோசலாதேவி, பிள்ளைநாயகம் காலஞ்சென்ற பாலசுந்தரம் மற்றும் தருமரத்தினம் ஆகியோரின் மைத்துனரும்

அபிவர்ணன், கனிமொழி, சாதனா, வாசகன், மஞ்சரி, தருண், அக்சரா, சஷ்மிகா, பிரமிகா ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.

அன்னாரின் இறுதி கிரியைகள் 30/01/2025 நாளை (வியாழக்கிழமை)காலை8.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று காலை 10.00 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக இரணைமடு இந்து மயானத்திற்குஎடுத்துச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

*30.01.2025 காலை 7.00 மணிமுதல் கிளிநொச்சி- இரணைமடு சந்தியில் இருந்து அன்னாரின் இல்லத்திற்கான போக்குவரத்து ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

தகவல்

சு. கமலம்மா (மனைவி0767014510)

சு. காண்டீபன் (மகன்0763806990)

Share this Article