போர் நிறுத்தத்தை பாகிஸ்தான் மீறியது – இந்தியா பதில் தாக்குதல்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் மான்கோட் செக்டாரில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு தாக்குதல்நடத்தியதாகவும், இந்திய இராணுவம் அதற்கு பதிலடி கொடுத்ததாகவும் தகவல்வெளியானது.

இதன்மூலம் ஒப்ரேஷன் சிந்தூருக்குப் பிறகு ஏற்பட்ட போர் நிறுத்தத்தைபாகிஸ்தான் மீறியதாக கூறப்பட்டது. இந்தத் தாக்குதல் சுமார் 15 நிமிடங்கள்நீடித்ததாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து இந்திய இராணுவம் விளக்கமளித்து அறிக்கைஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில்,”பூஞ்ச் பகுதியில் போர் நிறுத்த மீறல்கள் குறித்து சில ஊடகங்கள் மற்றும்சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் எந்தப் போர் நிறுத்த விதிமீறலும்நடக்கவில்லை என்பதை தெளிவுபடுத்துகின்றோம்என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article