சென்னையிலிருந்து வெளியேற வேண்டாம் – ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

திமுக கட்சியினர் அனைவரும் சென்னையை விட்டு வெளியேறாமல் அங்கேயே தங்கி இருக்க வேண்டும் என கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தமிழ்நாடு அரசியல் களம் பெரும் பரபரப்புடனே நிலவி வருகிறது.

தவெக ஆட்சியமைப்பதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி பலத்த எதிர்பார்ப்புகளை தோற்றுவித்துள்ளது. இந்த நிலையில் திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அக்கட்சியினருக்கு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

சென்னை அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக கட்சி கூட்டத்தில் பல முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதன்படி கட்சியினர் அனைவரும் சென்னையை விட்டு வெளியேறாமல் அங்கேயே தங்கி இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக சில முக்கிய முடிவுகளை எடுக்க நேரிடும் என்று ஸ்டாலின் இக்கூட்டத்தில் கூறியுள்ளார். இந்த உத்தரவு தற்போதைய அரசியல் நிலைமையின் தீவிரத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளது. எனினும் தவெக தலைவர் விஜய் தலைமையிலான கட்சி ஆட்சியமைக்கும் முயற்சியில் திமுக எந்த இடையூறும் செய்யாது என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Share this Article
Leave a comment