மட்டக்களப்பு – குடும்பிமலை பிரதேசத்தில் பாதுகாப்பாக நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுவீடன் நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 ரொக்கட் லோஞ்சர் ரக ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
நேற்று வெள்ளிக்கிழமை (06/02) மாலை விசேட அதிரடிப்படையினர் இதனை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
பொலன்னறுவை இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குடும்பிமலை பகுதியில் அரங்கலாவ விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினர் இணைந்து நிலத்தை தோண்டி ஆயுதங்களை மீட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட ஆயுதங்களை வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.