கதிரவேலு கோபாலு

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும் உரும்பிராய் கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு-கோபாலு அவர்கள் 27.07.2025 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கதிரவேலு – வள்ளியம்மை தம்பதியரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பர்- பூரணம் தம்பதியரின் அன்பு மருமகனும், பராசக்தியின் ஆருயிர்க் கணவரும், காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன், பசுபதி. நாகமுத்தன். நாகமுத்து. மருதையினார். கனகம்மா, நடேசு ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான தெய்வானை, கோபாலு, பசுபதி, கோமளம் மற்றும் தனுஸ்கோடி, தங்கம்மா, நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்.

யோகராணி ஓய்வுநிலை அதிபர், யா/ புங்குடுதீவு மேற்கு, A.M.T.M வித்தியாலயம்). பத்மநாதன் (அதிபர். யா/அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயம்). யமுனாராணி (ஆசிரியர். வ/வவுனியா C.C.T.M.S), நிர்மலராசன் (பிரதேச சபை ஊழியர், வேலணை). கேதீஸ்வரன். சற்குணராணி (கனடா), சோமசேகரன் (கனடா). சிவதர்சன் (கணக்காளர், சமூர்த்தித் திணைக்களம் வவுனியா). அனுதர்சன் (பொது சுகாதார பரிசோதகர் – ஏழாலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற விநாயகமூர்த்தி (கிராம சேவகர்) மற்றும் விஜிதா (ஆசிரியர். யா/கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம்). சண்முகராஜா (MAG நிறுவனம் – வவுனியா). ஜீவரேகா, குணராணி. பரூஷன் (கனடா). வினோஜிதா (ஆசிரியர். மு/முள்ளியவளை கலைமகள் வித்தியாலயம்). சங்கீதா (பிரதி முகாமையாளர். மக்கள் வங்கி – வவுனியா), தர்ஷிகா (அபிவிருத்தி உத்தியோகத்தர். பிரதேச செயலகம் கோப்பாய்) ஆகியோரின் அன்பு மாமனாரும், சிந்துஜா-ஜெயந்தன், நாகலக்ஷனா (கனடா). வினோஜன் (தாதிய உத்தியோகத்தர், யாழ். போதனா வைத்தியசாலை). அக்ஷயா. மாரீஷன், யதுசிகன், பானுஜன், விதுஷனன். அஸ்வின், மிதுஷிகா. ஷயனிகா, ஆருஷன், ஆதுஷா, தக்ஷகி, பபிஷன். விதுர்ஷிக்கா, யஸ்விகா. திஸ்மிகா. அஸ்மிகா, ஷஸ்விகன் ஆகியோரின் அன்புப் பேரனும், ஹர்னிஸ், யஸ்வினி ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று  (ஜூலை 30) புதன்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் இல. 84/7, ஞானவைரவர் கோவில் வீதி. உரும்பிராய். அவரின் இல்லத்தில் நடைபெற்று. பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக உரும்பிராய் இளங்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு கோ.அனுதர்சன் (மகன் 077 339 4938)

Share this Article