இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஆகிய இருவருக்கும் இடையில் நடந்த கலந்துரையாடலின் அடிப்படையில் இந்திய கப்பல்கள் மீது தங்கள் நாடு எவ்வித தாக்குதல்களையும் நடத்தாது என ஈரான் உறுதியளித்திருந்தது.

உண்மையை சொன்னால் இந்திய கொடி தாங்கிய கப்பலின் மீது ஈரான் எவ்வகையிலும் தாக்குதல்களை நடத்தாது. அது ஈரானின் நிரந்தர அழிவுக்கு வழி வகுக்கும்.
போர் தீவிரமடைந்துகொண்டிருந்த மார்ச் மூன்று அன்று Mt puspak எனும் கப்பல் ஈராக்கின் கோர் அல் சுபைர் (Khor al Zubair) மற்றும் ஈரானின் எண்ணெய் முனையங்களுக்கு அருகிலுள்ள பகுதியிலிருந்து பயணத்தைத் தொடங்கியது. தற்போது ஹேர்மூஸ் நீரிணையை கடந்து இது அரபிக்கடலில் (Arabian Sea) இந்தியா நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது.
அதேபோல இன்னொரு இந்திய கப்பலான MT Parimal ஈராக்கின் பஸ்ரா (Basra) மற்றும் அதை ஒட்டிய ஈரானிய கடல் எல்லைப் பகுதியிலிருந்து மார்ச் 5, 2026 அன்று தனது பயணத்தைத் தொடங்கியது. இதுவும் தற்போது ஹேர்மூஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்து அரபிக்கடல் பகுதியில் இந்தியா நோக்கி பயணித்து வருகிறது.
இதேசமயம் இந்த நீரிணையில் வைத்து ஏனைய நாடுகளை சேர்ந்த மூன்று கப்பல்கள் மீது ஈரான் கண்ணிவெடி தாக்குதல்களை நடத்தியிருந்தது. அந்த சமயத்திலும் இந்த கப்பல்கள் அதே பகுதியில்தான் பயணித்துக்கொண்டிருந்தன.