அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு – 10 பேர் பலி

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர், பொண்டி (Bondi) கடற்கரைப் பகுதியில் இன்று (14/12) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளதை அந்நாட்டு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அவர்களில் 09 பொது மக்களும் துப்பாக்கிச் சூட்டை நடத்திய ஒருவரும் அடங்கியுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இந்த சம்பவத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இருவர் மீதும் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.

மற்றைய நபர் காயமடைந்துள்ள நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அப்பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.

Share this Article
Leave a comment