மட்டக்களப்பு வாகரையில் மனைவி கொலை – கணவன் கைது

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

மட்டக்களப்பு, வாகரை, கதிரவெளி பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட குடும்பத் தகரறினால் 23 வயதுடைய இளம் பெண் ஒருவர் அவரது கணவனால் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, கணவன் தனது மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளமை ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் 26 வயதுடைய சந்தேகநபரான கணவன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாகரை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share this Article
Leave a comment