ஈரானின் எச்சரிக்கை-ஹார்முஸ் நீரிணை வழியாகச் எண்ணெய் போக்குவரத்து தடை!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஹார்முஸ் நீரிணை  வழியாகச் செல்லும் எண்ணெய் போக்குவரத்தைத் தடுக்கப்போவதாக ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை உலக நாடுகளை அதிர்ச்சியில்  ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவற்றின் நட்பு நாடுகளுக்குச் சொந்தமான “ஒரு லிட்டர் எண்ணெய் கூட” ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல அனுமதிக்கப்படாது என்று ஈரான் எச்சரித்துள்ளது.

அமெரிக்கா அல்லது இஸ்ரேலுடன் தொடர்புடைய எந்தவொரு கப்பலும் அல்லது எண்ணெய் சரக்குகளும் ஈரானியப் புரட்சிகர காவல்படையின் நியாயமான இலக்காக கருதப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண காலங்களில், உலகின் மொத்த எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவில் சுமார் 20% இந்த குறுகிய கடல் பாதை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது.

ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையிலான இந்த மோதல் போக்கு, உலக சந்தையில் எண்ணெய் விலையைத் தாறுமாறாக உயரச் செய்துள்ளது.

சமீபத்திய தகவல்களின்படி, பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்தப் பாதையில் கப்பல் போக்குவரத்து சுமார் 97% வரை குறைந்துவிட்டதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன

எண்ணெய் விநியோகம் தடைப்பட்டால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பெரல் $120-க்கும் மேல் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இது உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும்.

சவுதி அரேபியா போன்ற நாடுகள் குழாய் வழிகள் மூலம் எண்ணெயை அனுப்ப முயன்றாலும், அவை ஹார்முஸ் நீரிணைக்கு ஈடாகாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Share this Article
Leave a comment