தென்றல் தாலாட்ட அசைந்தாடும்
அமுதக் கடல் நடுவே
அழகிய நெடுந்தீவின்
கல்வியோடு பல கலையும்
எம்மவர்க்கு ஊட்டி வளர்த்த
நெடுந்தீவு மகா வித்தியாலய அன்னையே!
அகவை எண்பது காணும் இந்நாளில்
இன்னும் பல நூறாண்டு வாழியவே!
உன் மடிதனில் தவழ்ந்த குழந்தைகளின்
கல்விப்பசி தீர்த்து
கலையனைத்தும் கற்றுயர்ந்து
தேசமெல்லாம் உய்த்துணர்ந்து வாழ
வகை சொல்லும் வித்தகராய்
மடமைகள் போக்கி
இயலாமை எனும் இருளகற்றி
ஆளுமைமிக்க அறிவளித்து
விருட்சமென ஒளி தந்த
அமுத விழா நாயகியே
நீ வாழியவே!
எத்துறையாயினும் மட்டில்லா
உயர் மனிதர்களாய்
சமூகம் போற்றிட வழியமைத்த
நர்த்தக நாயகி நீயம்மா!
நான் என்பது மறந்து நாமாக கைகோர்த்து
விழுமியப் பண்புதனை
உயர்வாகப் போற்றி
நானிலம் எங்கிலும்
உன்புகழ் சொல்ல வகை செய்த
கல்விக்கூடமே நீ வாழியவே!
இத்தனை உயர்வுபெற
வழிசமைத்த எம் அன்னையின்
பழைய மாணவர்களின் வரவுக்காய்
காத்திருக்கும் பள்ளிச்சிறார்கள்
எக் குறையுமிலாது
வளமனைத்தும் சேர்த்து
மகிழ்வோடு உயர்கல்வி பெற
“மீண்டும் பள்ளிக்கு”
நாமெல்லாம் கைகோர்த்து
பலநூறு உதவிகள் புரிந்தே
கல்வித்தாய் வாழ வழியமைப்போம்
வாழிய நெடுந்தீவு மகா வித்தியாலயமே!
இரா.தர்மரத்தினம்
ஓய்வுநிலை ஆசிரியர்
பழையமாணவர்