ரஷ்யாவுக்குள் புகுந்து உக்ரைன் நடத்திய தொடர் திடீர் தாக்குதலில் ஒரு எண்ணெய் முனையம், ஒரு எண்ணெய்க் குழாய் வழித் தடம், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு போர் விமானங்கள், இரண்டு கப்பல்கள் தகர்க்கப்பட்டன.
இந்த திடீர் தாக்குதலில் தமன்னெப்டிகாஸ் எண்ணெய் முனையம், ஒரு வெடிமருந்துக் கிடங்கு, தெற்கு கிராஸ்னோடர் பிராந்தியத்தில் ஒரு குழாய் வழித்தடம், இரண்டு கப்பல் துறைமுகம், 2 கப்பல்கள் சேதமடைந்தன. இதனால், பெரும் தீ விபத்தும் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் ரஷ்யக் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் ஒரு வெடிமருந்துக் கிடங்கு தகர்க்கப்பட்டது. டிரோன்களுக்கான ரஷ்ய ஏவுதளமும் தாக்கப்பட்டது. மேற்கு ரஷ்யாவில் லிபெட்ஸ்க் நகருக்கு அருகிலுள்ள ஒரு தளத்தில் 2 ரஷ்ய போர் விமானங்கள் தகர்க்கப்பட்டன.