நெடுந்தீவு வாருங்கள் – தீவான் கலாகணேசனின் கவிவரிகள்..

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

 

நெடுந்தீவு வாருங்கள்

வந்தோரை வரவேற்கும்

கற்பகதருவும் கண்ணிய மாந்தரும்

வற்றாத பேரன்பின் விருந்தோம்பலும்

சற்றேனும் குறையாத சந்ததியாளர்

பனையோடு சேர்ந்த பற்பல உணவுகள்

நொங்கோடு பணியாரம்

நூறாகும்

எங்களூர் கூழ்குடித்தால்

ஆயுள்அதும் நூறாகும்

வாயூறும் பனங்கட்டி

கள்ளு

பதநீரின் சுவை வேறு

போய்யுண்டு பாரும்

பனம் பொருளின் பலன் அறிவீர்

கற்பகதருவென்று

கடவுளிட்டட பெயரதுவே

அற்புதமூலியிது

புளுக்கொடியல் பினாட்டு

ஒடியல் புட்டோடு இலைக்கறிகள் மீன்நண்டுறாலெண்டு கடல்படு திரவியங்கள்

போட்டுப் புரட்டி கலந்துண்டுசாப்பிட்டால்

காலத்தில் சாவில்லை

கடக்கும் அகவை நூறையும் தாண்டி

பனங்கிழங்குண்டால்

பதமாக மலங்கழியும்

மனமுண்டு மகிழ்வுண்டு

மரணமது இடையிலில்லை

கண்துலங்கும்

காது விளங்கும்

கடைசிவரை பல்லிருக்கும்

எங்களூர்மாந்தருக்கு

நிறைந்த பலமிருக்கும்

பிறந்தால் நெடுந்தீவு

மண்ணில் பிறந்து விடு

சிறந்த அறிவாளர் கவிஞர் கணக்காளர்

பிறந்தமண்ணெண்றால் 

பொய்யில்லை

நடனம் கூத்து நளினம் சிலேடையென்று பலகலையில் வல்லவர்கள்

விருந்தோம்பலென்றால்

விருப்பம் இவர்களுக்கு

பெரும்பாலும் கூடிக்குடிப்பர் கூள் கள்

குதுகலிப்பாய்

வருர்போதும் கடல்படு திரவியங்கள் கருவாடும்

பனப்பொருட்கள்

தருவார்கள்அன்புடனே

ஒருவருக்கொருவர் தழுவி முத்தமிடும் தமிழர்பண்பாடும்

தவறாது இன்றுமுண்டு

மானம் தன்மானம் வீரமுடன் காதல்

விளையும்நிலம் நெடுந்தீவு

என்தாயும்நெடுந்தீவு

தந்தையும் நெடுந்தீவு

தூயதமிழ்பேசும்

தமிழர் தனிநாயகமும்

பிறந்தமண் இதுவாகும்

ஆயர் கவிவாணர் ஆன்றோர்பலருண்டு

நடனக்கலைமாந்தன் வேலானந்தர் பிறந்தமண்ணிதுவாகும்

வெடியரசன் கோட்டை ஆயுள் பலங்காட்டும் பெருக்குமரம் இங்குண்டு

வெளிநாட்டோர் வந்து

சுற்றுலாச்செய்ய

சிறந்தபலவுண்டு

குதிரைத்தீவு என்றும்

பால்த்தீவென்றும்

பசுத்தீவு பசுந்தீவு

பலபெயருண்டு

பாருங்கள் சென்று

பகிருங்கள்நன்று பாசத்தை அன்பை பண்பாட்டு தன்மைகளை

வாருங்கள் என்று வரவேற்க்கும் பக்குவத்தை

நேரில் தரிசித்தால் நெஞ்சில் நிறைந்திருக்கும்

தீவான்

கலாகணேசன்

ஈழம்

Share this Article