யாழ்ப்பாணத்துக்கு இன்றையதினம் (செப். 01) விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, திடீர் விஜயமாக கச்சத்தீவிற்கு சென்று திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மைக்காலமாக இந்தியா மற்றும் இலங்கை அரசியலில் கச்சததீவு தொடர்பாக பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் ஜனாதிபதி இன்று தீடீர் விஜயமாக கச்சத்தீவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதே வேளை ஜனாதிபதி மயிலிட்டியில் தனது இன்றைய உரையில் கச்சதீவு இலங்கைக்கு உரியது எனவும் அதனை யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியாது என தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.