ரஷ்யாவை 13 அடி உயர சுனாமி அலைகள் தாக்கியது!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்குப்பிறகு கம்சட்கா தீபகற்பத்தில் 13 அடி உயர சுனாமி அலைகள் தாக்கியதாகவெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் இன்று (ஜூலை30) அதிகாலை 8.7 ரிக்டர்அளவிலான நிலநடுக்கம் பதிவானது.

ரஷ்யாவின் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்கம்சட்ஸ்கியிலிருந்து சுமார் 85 மைல்தொலைவில், 19 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகஅமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பானின் கடலோரப் பகுதிகளுக்கும் சுனாமிஎச்சரிக்கை விடுக்கப்படுள்ளதுடன், அந்நாட்டில் 1 மீட்டர் வரை அலைகள்உயரக்கூடும் என்று அந்நாட்டின் வானிலை ஆய்வு நிறுவனம் எதிர்வுகூறியுள்ளது.

அத்துடன் ஹவாய் தீவுகள் மற்றும் அலாஸ்காவின் அலூடியன் தீவுகளின் சிலபகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்செய்தி வெளியிட்டுள்ளன.

Share this Article