பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டன – தாய்லாந்து, கம்போடியா!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான எல்லை மோதல்களைத்தீர்த்து, போர் நிறுத்தத்தை ஏற்படுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

 இரு நாடுகளின் பிரதமர்களையும் அழைத்து, மோதல்களை முடிவுக்குக் கொண்டுவந்து அமைதியை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதாக தனதுட்ரூத் சமூக தள பதிவில் அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இரு தரப்பினரும் உடனடி போர் நிறுத்தத்தையும் அமைதியையும் நாடுவதாகவும், அவர்கள் உடனடியாக போர் நிறுத்தத்தில் ஈடுபடாவிட்டால் அவர்களுடன் வர்த்தகஒப்பந்தங்களில் ஈடுபடப் போவதில்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி தனதுபதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கம்போடியா பிரதமர் மற்றும் தாய்லாந்தின் தற்காலிகப் பிரதமருடனானதனது கலந்துரையாடலின் போது, இரு தரப்பினரும் போர் நிறுத்தத்திற்கானதீர்வுகளைத் தேடுவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி தனது பதிவில்குறிப்பிட்டுள்ளார்.

தாய்லாந்தும் கம்போடியாவும் நீண்ட வரலாறு மற்றும் கலாச்சாரத்தைக் கொண்டஇரண்டு நாடுகள் என்றும், எனவே அவர்கள் பல ஆண்டுகளுக்கு ஒத்துழைப்புடன்செயற்பாடுவார்கள் என்றும் நம்புவதாக டொனால்ட் டிரம்ப் தனது பதிவில்சுட்டிக்காட்டியுள்ளார்.

Share this Article