இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல்களை நிறுத்த இணக்கம் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இந்தியா மற்றும் பாகிஸ்தான் தாக்குதல்களை நிறுத்த ஒப்புக் கொண்டுள்ளதாகஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இரு நாடுகளும் பரஸ்பரம் இராணுவ நிலைகள் மீது தாக்குதல்கள் மற்றும் எதிர்தாக்குதல்களை நடத்தி வந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி தமது x கணக்கில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடியாக தாக்குதல்களைநிறுத்துவதற்கு ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பொதுஅறிவு மற்றும் சிறந்த நுண்ணறிவைப் பயன்படுத்தியதற்காக இரு நாடுகளுக்கும்வாழ்த்துக்கள்என்று அவர் பதிவில் கூறியுள்ளார்.

இதற்கமைய பாகிஸ்தானும் இந்தியாவும் உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் தாக்குதல்களை நிறுத்த ஒப்புக் கொண்டதாக பாகிஸ்தான் துணைப்பிரதமர் இஷாக் டார் தனது X கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் ஜம்முகாஷ்மீர்பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் சுற்றுலாப்பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டதுடன் 17 பேர்காயமடைந்ததைத் தொடர்ந்து பாகிஸ்தானும் இந்தியாவும் மோதலைத்தொடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Share this Article