‘ஒப்பரேஷன் சிந்தூர்’ – தாக்குதலை நடத்தும் இந்திய ராணுவம் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

பாகிஸ்தான் மற்றும் அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீர் பகுதிகளில்தீவிரவாதிகளின் மறைவிடங்கள் மீதுஆபரேஷன் சிந்தூர்என்கிற பெயரில்தாக்குதலை நடத்தியுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. நம்பகமானஉளவுத் தகவல்களின் அடிப்படையில் சுமார் ஒன்பது இடங்களில் ஏவுகணைமற்றும் வான்வெளித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.

இந்திய நேரப்படி (மே 7) நள்ளிரவு 1:05இல் இருந்து 1:30 வரை சுமார் 25 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற அந்தத் தாக்குதல், அந்தப் பகுதி முழுவதும்அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குண்டுவெடிப்பின் பெரும் சத்தம் அங்குவசிப்பவர்களை தூக்கத்தில் இருந்து அலறி எழ வைத்தது.

பாகிஸ்தானோ, ஆறு இடங்கள் மட்டுமே தாக்கப்பட்டது எனவும், இந்திய போர்விமானங்கள் ஐந்தையும், ட்ரோன் ஒன்றையும் தாங்கள் சுட்டு வீழ்த்தியதாகவும்கூறியுள்ளது. இந்தக் கூற்றை இந்தியா இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பொதுவான எல்லையாக இருக்கும் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி வந்து இந்தியா வான்வெளித் தாக்குதல்நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர் எனவும், 46 பேர் காயமடைந்தனர் எனவும்பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது.

அதேநேரம் இந்திய பகுதியில் எல்லை தாண்டி பாகிஸ்தான் நடத்தியகுண்டுவீச்சில் பொதுமக்கள் பத்து பேர் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம்தெரிவித்துள்ளது.

Share this Article