கந்தையா புண்ணியமூர்த்தி

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு மேற்கு 01ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட கந்தையா புண்ணியமூர்த்தி அவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (மே17) காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா பார்வதிப்பிள்ளை இணையரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான கந்தையா பராசக்தி இணையரின் மருமகனும் காலஞ்சென்ற வாலாம்பிகை அவர்களின் கணவரும் தரணிதாவின் பாசமிகு தந்தையுமாவார்.

கனகாம்பிகை, குணேஸ்வரி, சறோசாதேவி, புஸ்பராணி, கோமதி, ருக்குமணிதேவி( ஆசிரியை, கோணாவில் மகா வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் காலஞ்சென்ற திலகம் மற்றும் தில்லைக்காந்தன், ரஞ்சினி மற்றும் கோபாலபிள்ளை, இராசதுரை மற்றும் காலஞ்சென்றவர்களான நகுலராசா, கோமளராஜா, பாலசிங்கம் மற்றும் பரமேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனருமாவார்.

நளாயினி, நாகநந்தினி, யோகேஸ்வரன், கேதீஸ்வரி, சுதர்சினி, கவிதா,சறோயினி, சுசீந்திரன்,கோகுலவாணி, டர்சிகா,கணேஸ்வரன் , கோபிகா, தபிசன், யசோ, தர்சன் , றஜனி, கோகுலன், திலக்சனா, தரணிகா, சிந்துஜா, நியூசிகா, கஜீபன்,அட்சயா, டேறுகன், சங்கீத், மதீசன் மற்றும் காலஞ்சென்றவர்களான சசிதரன், தர்சினி ஆகியோரின் மாமனாருமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை (மே19) மூத்த சகோதரியின் இல்லத்தில் மதியம் 2.00 மணியளவில் இடம்பெற்று தகனக்கிரியைக்காக பனங்காணி ஆற்றங்கரை ஓடை இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.

இத் தகவலை உற்றார் , உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்.
குடும்பத்தினர்.

Share this Article