உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் மார்ச் 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை ஏற்கப்படவுள்ளதை முன்னிட்டு, அதனை மேற்கொள்வதற்கான முன்னாயத் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடல் நேற்று (மார்ச் 14) பிற்பகல் 4.00 மணிக்கு மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில், தேர்தல் அதிகாரி திரு. மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.
இதில், பிரதிப் பொலிஸ்மா அதிபர் திரு. ஜே. ஏ. ஹாலிங்க ஜெயசிங்க, உதவித் தேர்தல் ஆணையாளர் திரு. இ. சசீலன், பிரதம கணக்காளர் திரு. எஸ். கிருபாகரன், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திரு. ரமேஷ்குமார், கணக்காளர் திரு. ஏ. நிர்மல் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.