நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் https://delftmv.com இன்று (பெப். 19) அறிமுகப்படுத்தப்பட்டது.
வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டு விழா – 2025 இன் ஆரம்ப நிகழ்வின் போது சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இதனூடாக தகவல்களை விரைவில் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இணையத்தளத்தின் மூலம் தகவல்களை விரைவாக மற்றும் எளிதாக பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த இணையத்தளத்தின் வடிவமைப்பும் நிதி அனுசரணையும் எமது செய்தி இணைய குழுமத்தினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.