நெடுந்தீவு மகாவித்தியாலத்தின் வருடாந்த விளையாட்டு விழா- 2025 இன் இறுதி போட்டி நிகழ்வு இன்று (பெப். 19) மதியம் 2.00 மணிமுதல் மாலை வரை வித்தியாலய மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
வித்தியாலய முதல்வர் ஐ.தயாபரன் தலைமையில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்வி கலாசார விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் ம.பற்றிக்டிறஞ்சன் அவர்களும் சிறப்பு விருந்தினராக தீவக வலய கல்விப் பணிப்பாளர் ரி.ஞானசுந்தரம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
வித்தியாலய வளாகத்தில் இருந்து நிகழ்வு இடம்பெறும் மைதானத்தில் உள்ள விருந்தினர் மண்டபம் வரைக்கும் விருந்தினர்கள் வித்தியாலய பாண்ட் அணிவகுப்புடன் பிரதான வீதி வழியாக அழைத்து வரப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.
விருந்தினர்களால் மங்கள வழக்கேற்றல் நிகழ்வுடன் மைதான நிகழ்வுகள் ஆரம்பமாகியது. கொடியேற்றல், ஒலிம்பிக்தீபம் ஏற்றியதும் இல்லங்களைச் சேர்ந்த வீரவீராங்கனைகளின் அணிநடை நிகழ்வினை தொடர்ந்து நிகழ்வின் பிரதம விருந்தினரால் போட்டி நிகழ்வுகள் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இப்போட்டிநிகழ்வில் அயற்பாடசாலை அதிபர்கள், மதகுருமார், நெடுந்தீவு பிரதேச செயலர் , பழைய மாணவர்கள், பெற்றோர்கள் , நலன்விரும்பிகள் என பலர் கலந்து சிறப்பித்தருந்தமை குறிப்பிடத்தக்கது.
எமது DelftMedia குழுமத்தின் அனுசரணையுடன் இன்றைய போட்டி நிகழ்வுகள் யாவும் நேரலையில் ஒளிபரப்பாகியமை சுட்டிக்காட்டத்தக்கது.